calendar-tamil

திருமாங்கல்ய பூஜை

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளூடன் நாளை 11.01.2019 வெள்ளிக்கிழமை கூடாரவல்லியை முன்னிட்டு காலை 10.00 மணியளவில் சிறப்பு ஹோமங்களுடன் திருமண யோகம் தரும் திருமாங்கல்ய பூஜை நடைபெறுகிறது..

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி நாளை 11.01.2019 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் கூடாரவல்லியை முன்னிட்டு கோபூஜையுடன் வேத பாராயணம், பாசுரங்கள் பாராயணம் செய்து, சிறப்பு ஹோமத்துடன் ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கும் ஆரோக்ய லக்ஷ்மிக்கும் புஷ்பாஞ்சலியுடன் துளசி அர்ச்சனை, குங்குமார்ச்சனை நடைபெற்று அக்காரைவரைசல் எனும் பாயசத்துடன் சர்க்கரை பொங்கல் நிவேதனம் செய்து பக்தர்களுக்கு திருமாங்கல்ய சரடுடன் பிரசாதமாக வழங்கப்பட உள்ளது.

திருமாங்கல்ய பூஜை :

திருமணம் ஆகாத பெண்கள் தாங்கள் விரும்பும் நல்ல மணமகனைப் பெறுவதற்கும் திருமணமான பெண்கள் கணவனுடன் நல்லன்போடு குடும்பம் நடத்தவும் தம்மை விட்டு பிரியாமல் இருக்கவும், தீர்க்க சுமங்கலி பாக்யம் கிடைக்கவும், தன்வந்திரி பீடத்தில் உள்ள நவகன்னி சன்னதியிலும் ஆரோக்ய லக்ஷ்மி சன்னதியிலும் மஞ்சள், குங்குமம், மாங்கல்ய சரடு போன்ற சௌபாக்ய பொருட்களை வைத்து ஆண்டாள் நாச்சியார் பிரார்த்தனையுடன் மாங்கல்ய பூஜை செய்து இங்கு உள்ள அத்தி மரத்தினை வலம் வந்து மாங்கல்ய சரடு கட்டும் வழிபாடும், பூஜை செய்த மாங்கல்ய சரடை வருகை புரிந்த பக்தர்களுக்கு சௌபாக்ய பொருட்களுடன் பிரசாதமாக வழங்கப்பட உள்ளது.

மார்கழி மாத சிறப்பு :

தட்சிணாயன புண்ணிய காலத்தின் இறுதி மாதமான மார்கழியில் பல யாகங்கள் செய்வதை விடவும் அனைத்து புண்ணிய நதிகளிலும் தீர்த்தங்களில் நீராடுவதை விடவும் அதிகமான புண்ணிய பலன்களை இந்த மாதத்தில் மேற்கொள்ளும் பகவான் வழிபாட்டின் மூலம் பெற முடியும்' என்று புராணங்கள் கூறுகின்றன.

மாதங்களில் சிறந்தது மார்கழி. அதை தனுர் மாதம் என்றும் போற்றுகிறோம். மார்கழி மாதம் தேவர்களின் நேரமான விடியற்காலையில் "யார் ஒருவர் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து, பக்தியுடன் இறைவனை வழிபடுகிறார்களோ அவர்கள், ஆயிரம் ஆண்டுகள் பகவானை வழிபாடு செய்த பலன்களை தனுர்மாதமான மார்கழி மாத ஒருநாள் வழிபாட்டில் கிடைக்க பெறுகிறார்கள்.

மாதம் முழுவதும் வழிபட்டால் எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கும் என்பது கணக்கில் அடங்காது. சிவ-பார்வதியின் அருளைப் பெறுவதற்காக திருவெம்பாவையையும் பகவான் ஸ்ரீமன் நாராயணன் அருள் பெறுவதற்கு திருப்பாவையையும் மார்கழியில் அதிகாலையில் பாராயணம் செய்பவர்களுக்கு இறை அருள் விரைவில் பெறுவர்.

கூடாரவல்லி சிறப்பு :

"கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா'' இது ஸ்ரீ ஆண்டாள் இயற்றிய திருப்பாவையின் 27 ஆவது பாசுரம். இதைப் பாடியதும் கோதையாகிய ஆண்டாளுக்கு கோவிந்தன் திருமண பாக்கியம் அருளியதாக கூறப்படுகிறது. இருந்தாலும் சூடிக்கொடுத்த சுடர்கொடியான ஸ்ரீ ஆண்டாள், முப்பது பாசுரங்களையும் பாடி முடித்தாள்.

கூடாரவல்லி அன்று பெருமாள் கோயில்களில் குறிப்பாக ஆண்டாள் அவதரித்த ஸ்ரீவில்லிபுத்தூரில் " முழங்கை வழியே நெய் ஒழுகுமாறு' சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு விநியோகிப்பார்கள். இன்று பெருமாளைத் தரிசித்து பிரசாதம் பெற்றால் கன்னியர்களுக்கு அவர்கள் விரும்பும் இடத்தில் நல்ல கணவன் கிட்டுவார் என்பது ஐதீகம்.

மேற்கண்ட வைபவங்களுக்கு தேவையான மூலிகைகள், அபிஷேக திரவியங்கள், நெய், மஞ்சள், குங்குமம், வாசனை திரவியங்கள், தேங்காய், நல்லெண்ணெய், பழ வகைகள், புஷ்பங்கள், மலர் மாலைகள், வஸ்திரங்கள், மளிகை பொருட்கள் விரும்பும் அன்பர்கள் அளித்து பங்கேற்று தன்வந்திரி பகவான் மற்றும் சகல தேவதா அருளுடன் குருவருள் பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடுமபத்தினர் தெரிவித்தனர்.

Online Booking
Online Purchase available for Pujas,
Homam, Special Prasatham,
Deities and etc., Book now
Diyas Images
 
Diyas Images
 
Diyas Images