calendar-tamil

மஹா சண்டீ ஹோமம்

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி "கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன், பொள்ளாச்சி, சாக்த ஸ்ரீ. ஜிதேஷ் ஸுப்ரஹ்மண்யம் அவர்கள் பங்கேற்று நடத்தும் மாபெரும் மங்கள சண்டி யாகம் வருகிற விளம்பி வருடம் வைகாசி மாதம் 22,23 5.6.2018 செவ்வாய் மற்றும் 06.06.2018 புதன் கிழமை ஆகிய இரண்டு நாட்கள் வாழ்வில் அனைத்து நலன்களும் தரும் மங்கள சண்டீ யாகம் சிறப்பான முறையில் நடைபெற உள்ளது.

முதல் நாள் 05.06.2018 செவ்வாய்க் கிழமை காலை 5.00 மணி முதல் குரு வந்தனம், விக்னேஸ்வர பூஜை, மஹாஸங்கல்பம், புண்யாகவசனம், ஏகபஞ்சாஸத் மஹா கணபதி ஹோமம், நவக்ரஹ ஸூக்த ஹோமம், விசேஷ கோ பூஜை, மஹா பூர்ணாஹுதி. 05.06.2018 மாலை 5.00 மணி முதல் வேத பாராயணம், கலச பூஜைகள், சண்டி நவாக்ஷரி த்ரிசதி அர்ச்சனை, சதுசஷ்டி யோகினி பைரவ பலி பூஜை நடைபெற உள்ளது.

06.06.2018 புதன்கிழமை காலை 6.00 மணி முதல் வேத பாராயணம்,நவாக்க்ஷரி ஜெபம், சண்டி ஹோமம் துவக்கம், பாலா பூஜை, ஸுவாஸினி பூஜை, தம்பதி பூஜைகள் தொடர்ந்து நடைபெறும், மதியம் 12.00க்கு சண்டிஹோம மஹா பூர்ணாஹுதி நடைபெற்று, மஹாதீபாராதனை உபசார பூஜைகள் நடைபெறும். அன்று மாலை 4.30 மணி முதல் அஷ்ட பைரவருடன் சொர்ண கால பைரவர் மூல மந்திர ஹோமம், மஹா பூர்ணாஹுதி, மற்றும் கலசாபிஷேகம் நடைபெறும்.

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images