calendar-tamil

கோபூஜையுடன் காமதேனு ஹோமம்

மங்களகர்மான ஆடி மாதத்தில் கோ-பூஜை செய்து வழிபடுவது நல்லது. வாழ்க்கையில் பெரும் புண்ணியத்தைத் தருவது கோபூஜை. கோமாதாவின் உடலில் மும்மூர்த்திகளும், முப்பத்து முக்கோடி தேவர்களும், இதர தெய்வங்களும், ரிஷிகளும், அஷ்டவசுக்கள் அடக்கம் என்கிறது வேத நூல்கள்.

பசுவை பெற்ற தாய்க்கு இணையாக கருதிதான் நாம் ‘கோமாதா’ என்று அழைக்கிறோம். கோமாதா பூஜை செய்யும் போது பசுவை முன்புறமாக தரிசிப்பதை விட, பின்புறமாக தரிசிப்பது மிகவும் நன்மை தரும் என்று கூறப்படுகிறது. ஏனெனில் பசுவின் பின்புறத்தில்தான் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். பசுவை வழி படும்போது, முன் நெற்றி, வால் பகுதிகளில் சந்தனம், குங்குமம் வைத்து, மாலை அணிவிக்க வேண்டும். பசுவின் சாணமும் லட்சுமி அம்சம். எனவேதான் வீட்டு வாசலில் சாணம் கரைத்து தெளிக்கிறார்கள். பசுவுக்கு பூஜை செய்வது என்பது, அகிலத்தைக் காக்கும் அன்னை பராசக்திக்கு பூஜை செய்வதற்கு ஒப்பானதாகும். பசுவின் பால், நெய் கொண்டே யாகங்கள் செய்விக்கப்படுகின்றன. இவ்வாறு யாகங்கள் செய்வதால் மழை பொழியும் என்பது ஐதீகம்.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி "கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி வருகிற 20.07.2018 ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை கொடிய சாபங்கள் விளக ஸ்ரீ காமதேனு ஹோமத்துடன் மாபெரும் கோபூஜை என்கிற கோமாதா பூஜை நடைபெற உள்ளது. இப்பூஜையில் பசுவுடன் கன்றையும் சேர்த்து வஸ்திரம் சார்த்தி அரிசி, வெல்லம், அகத்திக்கீரை, சர்க்கரைப்பொங்கல், வாழைப் பழவகைகள் போன்றவற்றை ஆகாரமாக அளித்து, பலவகையான புஷ்பங்களை கொண்டு கோமாதாவின் 108 போற்றியை பக்தியுடன் சொல்லி வழிபட்டு நெய்தீபத்தால் ஆராதனை நடைபெற உள்ளது. தொடர்ந்து வலம் வந்து வழிபாடு நடைபெற உள்ளது.

இப்பூஜை பித்ரு சாபங்கள், பித்ரு தோஷங்கள், பலவகையான சாபங்கள் விலகவும், செல்வச் செழிப்பு உண்டாகவும், குழந்தை இல்லாமல் துன்பப்படுபவர்களுக்கு, புத்திரப்பேறு வாய்க்கவும், தீய சக்திகள் விலகவும்ம், கல்வி, செல்வத்துக்குரிய தேவதைகள் பசுவில் இருப்பதால், அவர்களுக்கு செய்யும் பூஜை மூலம் நல்ல கல்வியும், செல்வச் செழிப்பும் வந்து சேரவும். முற்பிறவியில் செய்த பாவங்கள் நீங்கவும், மன சஞ்சலங்கள் நீங்கி மகிழ்ச்சி குடிகொள்ளவும், பல யாகங்கள் செய்த பலனை பெறவும், பல புராதன கோவில்களுக்கு சென்று தெய்வத்தை வணங்கிய பலன் கிடைக்கவும், தீவினைகள், தீய சக்திகள் விலகவும், சௌபாக்கியங்கள் பெறவும் நடைபெறுகிறது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பதினர் தெரிவித்தனர். தொலைபேசி:04172 - 230033, செல் - 9443330203

எதிர்வரும் நிகழ்வு

குருப் பெயர்ச்சி மகா யாகம் - 04/10/2018

ஸ்ரீ அதர்வண பத்ரகாளி ப்ரத்யங்கிரா தேவி மஹாயாகம் - 11/08/2018

24 மணி நேரம் 27 யாகம் - 22/07/2018

கோபூஜையுடன் காமதேனு ஹோமம் - 20/07/2018

சகலமும் தரும் சண்டி யாகம் - 20/07/2018

கோடி ஜப ஹோமம் - 19/07/2018

சாஸ்தா ஹோமம் - 22/07/2018

ஸ்ரீ வரலட்சுமி ஹோமம் - 24/08/2018

ஸ்ரீ சுக்தம் மற்றும் பாக்ய சுக்தம் ஹோமம் - 27/07/2018

ஸ்ரீ வாஸ்து ஹோமம். - 27/07/2018

ஸ்ரீ மேதா தட்சிணாமூர்த்தி ஹோமத்துடன் ஸ்ரீ சரஸ்வதி, ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர், ஸ்ரீ வித்யா கணபதி யாகங்கள். - 15/08/2018

குரு பெரிச்சி மகா யாகம் 2018-2019 - 04/10/2018

காலத்தை வெல்லும் காயத்ரி ஹோமம் - 26/08/2018

ஸ்ரீ லக்ஷ்மி நாராயண யாகம் - 28/07/2018

ஹனி அபிஷேகத்துடன் மகா கருடா ஹோமம் - 15/08/2018

ஸ்ரீ ஹயக்ரீவர் ஹோமம் - 24/08/2018

கோடி ஜப ஹோமம் - 19/07/2018

கொடிய நோய்கள் தீர்க்கும் கோடி ஜப யக்ஞம் - 19/07/2018

Online Booking
Online Purchase available for Pujas,
Homam, Special Prasatham,
Deities and etc., Book now
Diyas Images
 
Diyas Images
 
Diyas Images